அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்!

கொத்தூர் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் பாடம் எடுத்தார்.

Update: 2024-06-20 06:30 GMT

ஆட்சியர் தர்ப்பகராஜ் 

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையம், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நியாய விலை கடை ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயலும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடத்தில் உள்ள மனப்பாடப் பாடல் குறித்து விளக்கம் அளித்து மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் பாடம் நடத்தினார். மேலும் பள்ளி சமையலறையில் மாணவர்களுக்காக சமைக்கப்படும் மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பள்ளி மற்றும் நியாய விலைக் கடை, துணை சுகாதார நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News