திருச்சியில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்

குடியரசுதினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்.

Update: 2024-01-26 09:22 GMT

குடியரசு  தின விழா

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதானத்தின் அடையாளமாக இரு வெண் புறாக்களை பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார், நலத்திட்ட உதவிகளும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், 25ஆண்டுகள் மாசற்ற பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Tags:    

Similar News