உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
By : King 24X7 News (B)
Update: 2023-11-02 11:43 GMT
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புலிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் கடந்த 27ம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இருந்தால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு அவரது கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அரசு அதிகாரிகள் அவரது உடலுக்கு மாரியதை செய்தனர்