நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-23 02:55 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம், கீழ்வேளுர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் போது கீழ்வேளூர், குருக்கத்தி, நீலப்பாடி ஆகிய இடத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு மேற்க்கொண்டு இருப்பு குறித்தான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் ஈரப்பதம், தரம் மற்றும் எடை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கீழ்வேளுர் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் எடைக்கு ரூ 10,000 மும் குருத்தத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை 1-க்கு 1 கிலோ கூடுதல் வீதம் 2600 மூட்டைகளுக்கு ரூ.69.737 மற்றும் நீலப்பாடி கொள்முதல் நிலையத்தில் கூடுதல் எடைக்கு ரூ.10,200 அபராத தொகையாக கணக்கிடப்பட்டு சம்மந்தப்பட்ட கொள்முதல் பணியாளர்களிடமிருந்து பெற்று நூகர் பொருள் வாணிய கழக கணக்கில் கொண்டுவர உத்தரவிட்டார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் விவசாயிகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். விவசாயிகளிடமிருந்து நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் எந்தவித கையூட்டும் பெறக்கூடாது என அறிவுறுத்தினார். இதனை மீறும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான்டாம் வர்கீஸ் எச்சரித்தார். ஆய்வில் முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News