பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

Update: 2024-02-20 12:40 GMT
மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். மதுராந்தகம் அருகே உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா,பங்களாதேஷ், இந்தோனேஷியா, உள்ளிட்ட மேற்பட்ட நாடுகளில் இருந்து இரைக்காகவும்,இனப் பெருக்கத்திற்காகவும் மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி, தட்ட வாயன், கரண்டி வாயன், வர்ணநாரை, பாம்புத்தாரா, வக்கா கூழைக்கடா,உள்ளிட்ட 23 வகையான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இயற்கையான பருவ கால சூழல், இரை, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சரணாலயத்திற்கு வருகை தரும். இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது 30 ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், இன்று காலை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சரணாலயத்தின் பார்வையாளர்கள் நடைமேடை, ஏரிக்கான நீர் வரத்து ,பறவைகள் வருகை காலம்,சரணாலய வளர்ச்சி, பறவைகள் குறித்த காட்சி கூடத்தில் பறவைகளின் ஒளிரும் படம் சீரமைக்க வேண்டும் குறித்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து சரணாலயத்திற்கு பார்வையிட மாணவ மாணவியரிடம் சரணாலயம் குறித்து கேட்டறிந்து வேடந்தாங்களை பற்றி கூறிய மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசு வழங்கினார்.
Tags:    

Similar News