வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்குஇயந்திரங்கள் வைக்கும்அறை மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்டஆட்சியர் ஆய்வு.;

Update: 2023-12-08 02:25 GMT

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் வாக்கு என்னும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்கு இயந்திரங்களை வைப்பதற்கான வைப்பறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் உருவாக்கப்பட உள்ளது. இந்நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் தலைமையில் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினர்.
Tags:    

Similar News