கடையநல்லூரில் தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Update: 2024-04-15 01:27 GMT
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 4ம் தேதி வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கொடிக்குறிச்சி தனியார் கல்லூரியில் வாக்கு என்னும் மையம் அமைய உள்ளது. அங்கு வாக்கு என்னும் மையத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் காவல் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.