நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்

குமாரபாளையத்தில் நடந்த நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாமில்  மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.

Update: 2024-05-15 13:39 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்  நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி கனவு  நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் உமா தலைமையில்  நடந்தது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த  வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.  உயர்கல்வியோடு தங்களின் திறன்களை மேம்படுத்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு  வருகிறது. உயர்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி, தொழில் முனைவோர்களாக முயற்சிக்க வேண்டும்.

இதன் மூலம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு உருவாக்கிட இயலும் என வலியுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் 12-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள்,  பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, அரசு கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.   

தனியார் கல்லூரி தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா,  சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர்  பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா,  உட்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். .

Tags:    

Similar News