தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 226 தேர்வு மையங்களில் 57787 பேர் எழுதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-06-05 08:38 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-IV பதவிகளுக்கான எழுத்து தேர்வு வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வானது திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, மானூர், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட 8 வட்டங்களில் அமைந்துள்ள 226 தேர்வு மையங்களில் 57787 பேர் தேர்வு எழுத உள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.