பொது விநியோகத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

பொது விநியோகத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Update: 2023-12-06 07:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் வாராந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 15ஆம் தேதிக்குள் நகர்வு செய்யப்பட வேண்டும். நுகர்வு குறைவாக உள்ள  நியாய விலைக்கடைகளை ஆய்வு செய்து நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகல் குடும்ப அட்டை விண்ணப்பித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உள்ள பொருட்கள் தரமாகவும் சரியான நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு இயக்க செய்யப்பட வேண்டும். மேலும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் எண் குடும்ப அட்டையில் சேர்க்கப்படாமல் உள்ள குழந்தைகளின் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பகுதிநேர நியாய விலைக்கடை பிரிப்பதற்கு வரப்பெற்ற மனுக்கள் மீது உடனடியாக முன்மொழிவு செய்து தல ஆய்வு மேற்கொண்டு உடனடியாக புதிய பகுதி நேர கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றப்பட்டுள்ளதை  சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து தீர்வு செய்ய வேண்டும். உணவுக் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் நியாய விலைக்கடைகள் தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட வேண்டும் . மேலும்,மழைக்காலம் என்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பொருட்களை பாதுகாத்து, பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என  அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தினார. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைபதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் கௌசல்யா, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர்(பொ) அபிராமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன்,  பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News