ஈரோட்டில் வைப்புநிதி பத்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

ஈரோடிட்டில் 17 மாணவ,மாணவியர்களுக்கு வைப்புநிதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.;

Update: 2024-03-12 14:16 GMT

வைப்புநிதி பாத்திரங்கள் வழங்கிய ஆட்சியர்

ஈரோடு மாவட்டஆட்சியரக கூட்டரங்கில் மாவட்டஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதி நிறுவனம் மூலம், வருவாய் ஈட்டும் தாய்,

தந்தையர் இறந்தாலோ அல்லது நிரந்தரமுடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சார்ந்த 17மாணவ, மாணவியர்களுக்கு வைப்புநிதி பத்திரங்களை வழங்கினார் தொடர்ந்து,

Advertisement

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பள்ளி மேம்பாட்டிற்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் பெற்ற பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், என்.கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் பேராசிரியர் அன்பழகனார் விருது, பள்ளி மேம்பாட்டிற்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ்,

கேடயம் பெற்ற வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் மாவட்டஆட்சித்தலைவரிடம்; விருதுகளை காண்பித்து வாழ்த்துபெற்றனர்.

Tags:    

Similar News