கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பாண்டு கரும்பு அரவை பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2023-11-18 07:33 GMT

கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்தில் கரும்பு அரவை பணியினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் அரவை நடைபெறுவதற்கு ஆலையில் 10,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 3,25,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரம் வரை 70 நாட்கள் நடைபெறும். மேலும் விவசாய தோட்டத்திலிருந்து ஆலை அரவைக்கு கரும்புகளை கொண்டு வர 200 வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஆள் பற்றாக்குறை, கூலி குறைக்க இரண்டு இயந்திரங்கள் மூலம் கரும்பு அறுவடை செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(சர்க்கரை ஆலை) பிரியா, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News