மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி குழு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2024-03-09 08:44 GMT

 குழு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களை கண்காணித்திடவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் தனபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் மற்றும் கூட்டுறவுத் துறை, பால்வளத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News