விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் விருது

தோட்டக்கலைத் துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் விருதுகள் வழங்குதல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தகவல்.

Update: 2023-11-22 04:46 GMT

பயிர் சாகுபடி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் 2 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15,000/- ம், இரண்டாவது பரிசாக ரூ.10,000/-ம் வழங்கப்படும். பாரம்பரிய காய்கறி விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி இனங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகள் கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் முதலிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட தேர்ந்தெடுக்கப்படுவர்.  நிபுணர் குழுவின் மூலம் மேற்காணும் விருதுக்கு www.tnhorticulture.tn.gov.in ல் விண்ணப்பிக்கலாம், அல்லது விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட / வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் விவசாயிகள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News