சித்திரை திருவிழா முன்னிட்டு மாவட்ட அளவில் போட்டி !
ஆலங்குடியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.;
Update: 2024-05-14 06:51 GMT
ஆலங்குடியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பூவரச குடியில் வடக்கு தெரு இளைஞர்கள் சார்பில அழ காம்பாள் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு மாவட்ட அளவில் போட்டி நடைபெற்றது. போட்டியில் சென்னை நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். முதல் பரிசை பூவரச குடி பால விநாயகர் கபடி அணியினரும் ,இரண்டாம் பரிசை உப்பு பட்டி அம்பாள் கபடி அணியினரும் ,மூன்றாம் வரிசை பூவரசகுடி சிவன் கபடி அணி, நான்காம் பரிசை நாகப்பட்டினம் கபடி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் எஸ் ஆர் சுழற் கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூவரச குடி வடக்கு தெரு இளைஞர்கள் செய்து இருந்தனர்.