சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சங்கரன்கோவில் நகராட்சி உள்ள அரசு பள்ளியில் காலை உணவுத் திட்ட தயாரிப்பு மைய சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு;
Update: 2024-02-22 12:25 GMT
சமையல் கூடத்தில் மாவட்ட ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமில் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்தார். சங்கரன்கோவில் நகராட்சி உள்ள பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட தயாரிப்பு மைய சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது சங்கரன்கோவில் வட்டாட்சியர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.