தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றம்

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-05-30 17:40 GMT

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த புராதான கற்கோவிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பெருமாளுக்கு மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்பட்டு வருவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி வைகாசி மாதத்திற்கான திரு வோண தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது . இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு யான பொருட்கள் மூலம் பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து பெருமாள் வெள்ளிகவசம் அணிந்து மலர் பக்தர்களுக்கு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பவனியாக கோவில் முன்புள்ள 32 அடி உயரமுள்ள கல்ஸ்தூபியின் அருகே கொண்டுவரப்பட்டது . மாலை 6.30 மணிக்கு லட்சுமி நாரா யண பெருமாள் முன்னிலையில் கல்ஸ்தூபியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News