தீபாவளி ஏல சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் கைது
குமாரசாமி பேட்டையில் தீபாவளி ஏல சீட்டு நடத்தி ஏமாற்றியவர்களை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 05:14 GMT
கோப்பு படம்
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி, பிடமனேரி மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் தனம் (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குமாரசாமிபேட்டையை சேர்ந்த கண்ணன் (37) ,தேவி (32), புவனேஸ்வரி (39) ஆகியோர் தீபாவளி சீட்டு நடத்தி உள்ளனர்.
இதில் தனம் மற்றும் அவரது உறவினர்கள் மாதம் 600 வீதம் சீட்டு கட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒட்டு மொத்தமாக அனைவரும் பணத்தை பெற்றுக் கொண்டு ரூ.2.51 லட்சம் திரும்ப தரவில்லை என தனம் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
புகாரின்படி சம்பந்தப்பட்டவர்களை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.