தீபத்திருவிழா: தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

Update: 2023-11-26 06:56 GMT

அமைச்சர்கள் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் அத்தியந்தல், ஈசானி மைதானம், மார்கட்டிங் கமிட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்ததாவது: திருவண்ணாமலை நகரில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிகளுக்காக கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அணையிட்டப்படி ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கின்றன.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் பயணிகளின் வசதிகளுக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்மூலம் 7000 நடை மக்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரில் உள்ளுரிலேயே பயணிகள் பயணிப்பதற்கு கட்டணமில்லா பேருந்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏற்பாடு செய்து உள்ளார். அதில் 40 பேருந்துகள் ஆன்மீக பெருமக்களின் பயன்பாட்டிற்கு இயக்க இருக்கின்றன. மேலும் வருகின்ற பயணிகள் நெருக்கடிகள் மற்றும் சிரமமில்லாமல் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்த ஆய்வில் மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் செந்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News