தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்திடாத தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-06-25 15:51 GMT

தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜலபதி தலைமையில் மயிலாடுதுறை நகர செயலாளர் பண்னை பாலு முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாநில மாணவரணி துணை செயலாளர் பார்த்திபன் கலந்து கொண்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாநில நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட தேமுதிகவினர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News