தி.மு.க. இளைஞரணி மாநாடு: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 6ஆயிரம் பேர் பங்கேற்பு
தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் செஞ்சியை அடுத்த நங்கலி கொண்டான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி பேசினார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் டி.கே.பி.ரமேஷ், உதயகுமார், அண்ணாமலை, எம்.டி.பாபு, விஜயகு மார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அமைச்சர் பேசும்போது, வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு பா.ஜ.க. ஆட்சியை அகற்றுகின்ற மாநாடாகவும், வரும் நாடாளுமன்ற தேர்த லில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் மாநாடாகவும் அமைய வேண்டும் என்றார்.
கூட்டத் தில் வருகிற 27-ந் தேதி இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி சிறப் பாக கொண்டாடுவது, சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரத்துக் கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், துணை செயலாளர் அமுதா ரவிக்குமார், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் அண் ணாதுரை, துரை, இளம்வழுதி, பச்சையப்பன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரவன், செஞ்சி நகர செயலாளர் கார்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.