நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: எ.வ.வேலு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Website
Update: 2023-10-29 09:04 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை தமிழக பொது பணிகள் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான எ.வ.வேலு முன் கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு தொகுதி அலுவலகம் திறந்து வைத்து, செய்தியாளரகளிடம் திராவிட ஆட்சி இரண்டரை ஆண்டுகளாக செய்துள்ள பல்வேறு திட்டங்களால் 40க்கும்40 நாடாளு மன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தான் என்று அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியான போளூர் சாலையில் திமுக தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தமிழக பொது பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்: திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் திருவண்ணாமலை திமுகவும் ஆரணி கூட்டணி கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டு வெற்றி பெற்றது, வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை மற்றும் ஆரணி இருக்கின்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி கட்சியினரையும் வெற்றிப் பெறுகின்ற வகையில் ஆரணி நாடாளுமன்ற தலைநகரமாக விளங்கும் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் முன்கூட்டியே தேர்தல் பணிகள் பணியாற்றிட தொகுதியு டையே திமுக அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது. வர இருக்கின்ற தமிழகத் தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டு கோள் ஆணையின் படி தி.மலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் இருக்கும் உடன்பிறப்புகள் அனைவரும் ஒரே நோக்கத்திற்காக கொண்டு, வெற்றிப் பெற்றிடவும், அதே நேரத்தில் தமிழக மக்கள் திராவிட ஆட்சி இரண்டரை ஆண்டுகள் காலமாக நாட்டு மக்களுக்காகவே பல் வேறு நல்ல திட்டங்களை முதல்வர் ஆணையாக வழங்கியுள்ளார். குறிப்பாக தி.மலை மாவட்டத்திற்கும் எல் லாம் நலத்திட்டங்களும் கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாவட்டத்துடைய அமைச்சர் என்ற முறையில் நான் பாலமாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற சிறிய மனுக்களாக இருந்தாலும் கூட முக்கியத்துவம் கொடுத்து அதன் மீது அரசின் சார்பில் பல பணிகள் நடவடிக்கைகள் எடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இரண்டரை ஆண்டுகளாக பல திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் காரணத்தால் அந்த நம்பிக்கை வைத்து சொல்லுகிறேன் தி.மலை மாவட்டத்தில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவது போல தமிழ் நாட்டிலுள்ள 39 நாடாளுமன்ற புதுச்சேரி உள்ளிட்ட மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிப் பெற முடியும் என்ற இலக்க அடிப்படையில் திமுக தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள் அதாவது கடந்த 22ந் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்து வாக்கு சாவடியின் முகவர் கூட்டமைப்பு கூட்டத்தில் வட தமிழகத்திலுள்ள மாவட்டங்களை ஒன்றினைந்து ஏறத்தாழ 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து அன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்திய போது இறுதிவரை உரை எனவும், ஆணை அல்லது தேர்தல் உத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் அந்த அளவுக்கு அறிவுரை வழங்கிய போது தி.மலை மாவட்ட தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் நடத்தக் கொண்டு தேர்தலை வெற்றிப் பெற்றிட ஒரே இலக்க கொண்டு பணியாற்றுகிறார்கள் அதன் படி 40க்கும் 40 என்ற நாடாளுமன்றத் தொகுதிகளும் வெற்றிப் பெறுவோம் என்றார். மேலும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்:அதிமுக தற்போது நடை பெறுகின்ற உள்கட்சி பூசல் காரண மாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு நிலையில் உள்ளதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று பதவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை காரணத்தால் இரு அணியினர் மாறி மாறி புகார் அளித்து வந்தனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். செய்தியாளர்கள் கேள்வி:பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது 30 மாத கால திமுக ஆட் சியை சரியாக செயல்படுத்தவில்லை சொல்கிறாரே?பிஜேபி மாநில தலை வர் அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை குறை சொல்லி இரண்டு, மூன்று ஓட்டுக் களை வாங்குவதற்காக பேசுகின்றார். மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் எப்பொழுது சி.டி ஸ்கேன் மையத்தை திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? அமைச்சர் எ.வ.வேலு பதில்: ஆரணி அரசு மருத்துவ மனைக்கு தேவையான கூடுதல் கட்டடம், உப கரணங்கள் வழங்கி வருகிறது திமுக அரசு புதிதாக மருத்துவர்கள் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. டெக்னிசியர்கள் தேவையான மருத்துவர்கள் தேர்வு செய்த பிறகு சிடி ஸ்கேன் மையம் திறக்கப்படும் என்று இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட துணை செயலாளர் விண்ணமங்கலம் ஜெயராணி ரவி, மாவட்ட பொரு ளாளர் தட்சிணா மூர்த்தி, நரகமன்ற தலைவர் ஏ.சி.மணி,ஒன்றிய செய லாளர்கள் வக்கீல் சுந்தர், எஸ். எஸ். அன்பழகன், துறை மமாது, மோகன், கண்ண மங்கலம் பேரூராட்சி செயலா ளர் கோவர்தன், ஒன்றியக் குழு பெருந் தலைவர்கள் கனிமொழி சுந்தர், பச்சையம்மாள் சீனிவாசன், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகா லட்சுமி கோவர்தன் உள்பட நிர்வாகி கள் பலரும் கலந்து கொண்டனர்.