இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்; தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா!

கருத்துக் கணிப்புகளின் படி இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா பேசினார்

Update: 2024-03-26 17:06 GMT
தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா இன்று கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், த.மு.மு.க., உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் ஆ.ராசா பேசுகையில்," இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். மோடி 400 அல்ல 150 நாடாளுமன்ற தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்ற செய்தி வட மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகிறது, என்றார்.
Tags:    

Similar News