இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் பிரசாரம்
நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து நாகை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-11 09:49 GMT
தேர்தல் பிரசாரம்
நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து நாகை நகரம் 31 வது வார்டில் நாகை நகர திமுக செயலாளரும், நகர மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் லோகநாதன் மற்றும் 31 வது வார்டு கழக நிர்வாகிகள் எஸ் எம் ஏ கணேசன் மற்றும் சீமென் கணேசன், ரவி பார்த்தி குமார் தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்