கடையநல்லூரிலில் திமுக பிரச்சார கூட்டம்

கடையநல்லூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-06 01:07 GMT
கடையநல்லூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே திமுக சார்பில் தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோபிநாத் பேசினார். இதில் கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் தலைமைக் கழகப் பேச்சாளர் மக்கட்டி இஸ்மாயில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News