சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிருந்தாதேவியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.;

Update: 2024-03-25 08:58 GMT

வேட்புமனு தாக்கல் 

சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இந்நிலையில் இன்று வேட்புமானு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருடன் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, பார்த்திபன் எம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். அவர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிருந்தா தேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கர், விடுதலை சிறுத்தை கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மொழியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News