பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கினார்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண்நேரு இன்று தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
Update: 2024-03-24 06:26 GMT
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதல்வன் அருண்நேரு அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கடந்த 22 ந்தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.இந்நிலையில் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு தனது கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.