ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக டி ஆர் பாலுவை அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
Update: 2024-03-19 07:22 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி ஸ்ரீபெரும்புதூர் ஆலந்தூர் தாம்பரம் பல்லாவரம் மதுரவாயில் அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகும் தற்பொழுது இந்த நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த டி ஆர் பாலு இருந்து வருகிறார். மீண்டும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் டி ஆர் பாலுவே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் இன்று மாலை திமுக சார்பில் வெளியிடப்படும் வேட்பாளர் பட்டியலில் டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுவார் என அறிவிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.