காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
காஞ்சிபுரத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்எல்ஏ.,கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் தற்போதைய எம்பி ஆக உள்ள க. செல்வத்தையே மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் முன்னிலையில், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு தலைமையில், பரந்தூர் பகுதியில் ஒன்று கூடிய ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளிட்டோரை நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து, சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள எம்பி க.செல்வத்தை திமுக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன்,ஒன்றிய நிர்வாகிகள் பழனி,கவிதா டில்லிபாபு, வெங்கட்ராமன்,மாவட்ட பிரதிநிதிகள் பார்த்திபன், ஆறுமுகம், திருஞானசம்பந்தம்,ஒன்றிய கவுன்சிலர்கள் உலகநாதன், லோகு தாஸ், கொளரி தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மற்றும் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சியை நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.