உணவு சமைத்து தந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
அரூர் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி துரித உணவகத்தில் உணவு சமைத்து தந்து பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.;
Update: 2024-04-14 04:45 GMT
வாக்கு சேகரிப்பு
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ மணி கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியில் இருந்த துரித உணவகத்தில் உணவு சமைத்து தந்து பொதுமக்களிடம் வழங்கி தமிழகத்தில் திமுக அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.