நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
சங்கரன்கோயிலில் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
Update: 2024-03-26 03:47 GMT
வாக்கு சேகரிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன், திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசியை வடக்கு மாவட்ட பொருளாளர் இல.சரவணன். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதை தொண்டர்களும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.