திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி அருகே இடங்கணசாலையில் திமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-02-04 02:11 GMT
அண்ணா நினைவு நாள்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தையொட்டி இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் செல்வம் தலைமையில் திமுகவினர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது இடங்கணசாலை நகர மன்றதலைவர் கமலக்கண்ணன், துணைத் தலைவர் தளபதி உள்ளிட்ட நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் திமுக நகர கழக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.