திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா பிரச்சாரம் !

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-10 05:05 GMT

ஆ.இராசா பிரச்சாரம்

மோடியின் செயலைக் கண்டு, ஐநா சபை கண்டிக்கிறது, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, பெரம்பலூரில் பிரச்சாரம்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா ஏப்ரல் 9ம் தேதி இரவு 9:30 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசும் போது, பெரம்பலூரில் அருண் நேரு வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலர்ந்தால், பெரம்பலூருக்கு மருத்துவஆராய்ச்சி மையம் கொண்டுவரப்படும், உலக அமைதிக்கான தூதுவர் என்று ஜவஹர்லால் நேருவை ஐ.நா. சபை அறிவித்தது.

அந்த ஐ.நா.சபை தற்போது இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறி பிரதமர் மோடியை கண்டிக்கிறது. காந்தியடிகள் பாடுபட்ட இந்த மண்ணில் சீக்கியம், பெளத்தம் என்று பல மொழிகள், பல மதங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாநில மக்களுக்கும் பல்வேறு வகையில் அந்தந்த மாநிலங்கலுக்கேற்ப உள்ளது. ஒரே மதம்,ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உடை, ஒரே உணவு, ஒரே தேர்தல் என்று மோடி கொண்டு வர நினைக்கிறார்.

அதற்க்கான வேலைகளை தற்போது மோடி துவக்கி விட்டார். அம்பேத்கர், நேரு, காந்தியடிகள் ஆகியோர் கொண்டு வந்த அரசியல் சட்டங்களை மோடி ஒழிக்க நினைக்கிறார். 1775 முதல் ஜெயலலிதா வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் நிறைய விசயங்கள் நடைபெற்று இருக்கிறது.

எனது வழக்கில் அதிகாரிகள் 14 நாட்கள் என்னிடம் கேள்விக் கேட்டனர். அதையெல்லாம் முறியடித்து வந்தவன் நான். 6 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.விற்கு நண்கொடை வந்துள்ளது. அதில் நஷ்டம் அடைந்த கம்பெனிகள் மூலம் பணத்தை உள்ளே விட்டு வெளியேக் கொண்டு வந்துள்ளனர்.

ஊழல் நிறைந்தவர்கள் பா.ஜ.க.உள்ளே சென்றால் ஊழல் எல்லாம் மறைத்துவிட்டு புனிதமாகிவிடுகின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அரசியல் சட்டம் இருக்காது நாட்டில் ஜனநாயகம் இருக்காது என பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News