முப்பெரும் விழாவிற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் பாலக்கரை பகுதி உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள தகவலில், ஜூன் 15 -ம் தேதி மாலை 4.00 மணி அளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும், முத்தமிழறிஞர், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்முக வெற்றிக்கு திமுகவை வழிநடத்தி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என நடைபெறும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர் மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கழக அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.