திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தருமபுரி திமுக மேற்கு மாவட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்கச் சோடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை தருமபுரி திமுக மேற்கு மாவட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்கச் சோடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் கிழக்கு ஒன்றியம் தென்கரைக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், இராமியண, கர்த்தனூர், தாதனூர் குருபரஅள்ளி, கடத்தூர் மேற்கு ஒன்றியம் மணியம்பாடி, நல்லகுட்டலஅல்லி, ஓசஅள்ளி, ஒப்பிலிநாயக்கன்அள்ளி, லிங்கநாயக்கன அள்ளி, மடதள்ளி, மற்றும் கடத்தூர் பேரூர், தருமபுரி வடக்கு ஒன்றியம், மூக்கனூர் அக்கமனள்ளி, நாயக்கன்அள்ளி, குப்பூர், ஆகிய ஊராட்சி சார்ந்த பாக ஒருங்கிணைப்பாளர்கள் பாகமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாகவும், இல்லந்தோறும் ஸ்டாலினின்குரல் என்ற முழக்கத்தில் வீடு வீடாக கழக ஆட்சியில் சாதனைகளை எடுத்துக் கூறி ஒன்றிய பாசிச அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகங்களையும் திண்ணை பிரச்சாரம் செய்வது தொடர்பாக ஆலோசனைகளை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.