திருச்சியில் திமுக கொடியேற்று விழா- 2அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சியில் திமுக கொடியேற்று விழாவில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-01-20 08:55 GMT

திமுக கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள்

திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக பெரிய கடை வீதி தைலா சில்க்ஸ் அருகில் 100-வது கொடியேற்று விழா நடைபெற்றது. திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திமுக கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கழக மூத்த முன்னோடிகள் 100 நபர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்,கே.என்.சேகரன், சபியுல்லா, செந்தில்,

பகுதிகழகச் செயலாளர் மோகன் மற்றும் நகர, பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News