காளப்பநாயக்கன்பட்டி பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம்!

Update: 2024-03-23 10:06 GMT

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி, ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் அவர்கள், பேரூர் கழக செயலாளர் முருகேசன் முன்னிலையில் வகித்தனர்.

மேலும் பேரூர் மன்ற தலைவர்,வார்டு கழக செயலாளர்கள்,பேரூர் மன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News