திமுக., பொதுக்கூட்டம்

பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-03-05 09:31 GMT

எங்களை எவனெல்லாம் அழிந்து விடுவான் என்று சொல்கிறானோ, அவனுக்கு எல்லாம் ஆயுசு கம்மி என்று அர்த்தம் பொள்ளாச்சியில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு..

பொள்ளாச்சி..மார்ச்..05 பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொள்ளாச்சி நகர தி.மு.க சார்பில் எல்லோருக்கும் எல்லாம் ,தி.மு க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்க்கு பொள்ளாச்சி நகர கழக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமைதாங்கினார் விழாவில் தி.மு.க தலைமைகழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திகலந்து கொண்டு பேசினார்.. இந்த ஆட்சி வந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய போகிறோம் இங்கே எனக்கு முன்னாள் பேசினார்கள் வெயில் காலத்தில் தாமரை முளைக்காது என்று, தமிழ்நாட்டில் எப்பவுமே முளைக்காது நைனா தூத்துக்குடியில் தலைகீழாக நின்றார்கள்..

குட்கா கஞ்சா குடோன் யார் வைத்திருக்கிறார்கள் இவை அனைத்தும் அவானி துறைமுகம் வழியாக தான்  வருகிறது மோடியை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் செய்தால் ஆண்மகன் கூட்டணியை விட்டு வந்து விட்டோம் என்கிறீர்கள் ஆனால் அவர்கள் வரவில்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி முதல்வர் நல்லாட்சி நடத்தி வருகிறார்.. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கூறி வருகிறோம் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு ஒரு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றிவிட்டார்கள் என்று பொதுக்கூட்டில் கலந்து கொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்..  

Tags:    

Similar News