திமுக அரசு மாணவர்களுக்கான திட்டங்களை நிறுத்தி விட்டது-எஸ்.பி வேலுமணி

திமுக அரசு மாணவர்களுக்கான திட்டங்களை நிறுத்தி விட்டது என எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2024-02-17 15:16 GMT

புத்தகம் வழங்கிய முன்னாள் அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் குனியமுத்தூர் பகுதிக்கழக அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவிடும் வகையில் வினா- விடை புத்தகங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி 26 வருடங்களாக வினா- விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருவதாகவும் மாணவர்களுக்கு மடிக்கணினி முதல் மிதிவண்டி வரை ஜெயலலிதா வழங்கினார் எனவும் அவரை பின்பற்றி எடப்பாடியார் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

Advertisement

தற்போதய திமுக அரசு மாணவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டதாகவும் கூறினார். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள்,நவீன உபகரணங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டுள்ளது எனவும்,

தற்போது வழங்கப்பட்ட வினா- விடை வங்கி புத்தகமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றவர் கடந்த முறை தேர்ச்சி மாணவர்களில் 80 சதவிகிதம் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இது பேருதவியாக இருந்ததாக மாணவர்கள் கூறியதாக அப்போது தெரிவித்தார்.

Tags:    

Similar News