திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம், வாளாடி புது ரோட்டில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேர்ருவை ஆதரித்து திமுக மாவட்ட பிரதிநிதி சார்லஸ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Update: 2024-04-12 01:38 GMT
திருச்சி மாவட்டம் ,லால்குடி அருகே கீழவாளாடி மற்றும் வாளாடி புது ரோடு ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர அருண் நேருவை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாய் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர் .
திருச்சி மத்திய மாவட்ட மகளிர் அணி தலைவி கங்கா பரமானந்தம் முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் ஸ்டாலின் கந்தசாமி ஒன்றிய பிரதிநிதிகள் சுபாஷினி, பிரபாகர், மலர், மாவட்ட விவசாய அணி குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.