சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திமுக அமைச்சர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் திமுக அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-29 02:09 GMT
 திமுக அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சங்கரன்கோவிலில் புதிதாக 2 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரத்தை பார்வையிட்டார் அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த நல்வாழ்த்துக்கள் அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களின் மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதனைத் தொடர்ந்து சங்கரன் கோவில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எங்கு எது தேவையோ அதை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News