மகளுடன் வந்து வாக்களித்த திமுக எம்எல்ஏ கதிரவன்
சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள குமரன் மான்ய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தனது மகளுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.;
Update: 2024-04-19 07:50 GMT
வாக்கை பதிவு செய்த எம்எல்ஏ கதிரவன்
பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள குமரன் மான்ய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் 144 -க்கு ஜனநாயக கடமையாற்ற மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் வருகை தந்தார். பின்னர் மகளுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.