திமுக எம்.பி. வேட்பாளர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Update: 2024-03-25 11:59 GMT

செய்தியாளர் சந்திப்பின் போது

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆசிர்வாதத்தால் வேட்பாளராக‌ நான் அறிவிக்கப்பட்டுள்ளேன். மேலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெறும் அதற்கான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம்‌. தற்போது வரை தமிழ்நாட்டில் அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி தேவைப்படும் அனைத்து கூடுதல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம்.

 மகளிர் உரிமை தொகை, பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டம், பெண்கள் இலவச பேருந்து பயணம் போன்ற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரும் தேர்தலில் டீசல் விலை குறைப்பு, வீட்டு சிலிண்டர் விலை குறைப்பு‌ போன்ற பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். எனவே இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கவுன்சிலர்  கிருஷ்ணவேணி வரதராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே. சிவானந்தன், திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பின் அமைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News