திமுக எம்பிக்களால் எந்த பயனுமில்லை - ஆர்.பி.உதயகுமார்

மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.37,000 கோடி கேட்டும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற முடியாத நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று எம்பிக்களை அனுப்பினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.ஆனால் அதிமுக கடந்த காலங்களில் காவேரி பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிய சம்பவங்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2024-03-21 04:14 GMT

அதிமுக ஆலோசனை கூட்டம் 

சோழவந்தானில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியாத நிலையில் இருந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக 37,000 கோடி கேட்டும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற முடியாத நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று எம்பிக்களை அனுப்பினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஆனால் அதிமுக கடந்த காலங்களில் காவேரி பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிய சம்பவங்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறது ஆகையால் அதனை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News