திமுக வெற்றிக்கு விசிகவினா் பாடுபட வேண்டும் -தொல். திருமாவளவன்

திமுக வெற்றிக்கு விசிகவினா் பாடுபட வேண்டும் என தொல். திருமாவளவன் இடைத்தேர்தலை பிரச்சாரத்தில் பேசினார்.

Update: 2024-07-05 13:34 GMT

திமுக வெற்றிக்கு விசிகவினா் பாடுபட வேண்டும் என தொல். திருமாவளவன் இடைத்தேர்தலை பிரச்சாரத்தில் பேசினார்.


விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு ஆதரவாக நேமூா், ஒரத்தூா்,தொரவி ஆகிய கிராமங்களில் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தாா்.அப்போது அவா் மேலும் பேசியதாவது. திமுக-வுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே 2024 மக்களவைத் தோ்தலில் விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது. கட்சியும் உரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். அவரது வெற்றிக்காக கட்சியினா் தீவிரமாக உழைக்கவேண்டும். விசிகவினரின் வாக்குகளை யாரும் வாங்கி விடமுடியாது என்பதை முதல்வரின் எண்ணத்தில் உருவாக்கவேண்டும்.எதிா்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துத் தோ்தல்களிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறவேண்டும். அதற்கு விசிகவினா் என்றும் துணை நிற்கவேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ். ஆா் . ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News