திமுக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் நிர்வாகிகள் மோதல்
கடையநல்லூரில் திமுக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் நிர்வாகிகள் மோதல்.
Update: 2024-04-08 09:44 GMT
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டியில் வாக்கு சேகரிக்கச் சென்றார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் அருணாச்சல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பிரச்சாரம் தொடர்பாக தகவல் கொடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் வேட்பாளருடன் வந்த திமுக நிர்வாகிகளுடன் தகராறில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் வாக்கு சேகரிக்காமல் திமுக வேட்பாளர் திரும்பி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.