திமுக வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மக்களவை தேர்தலையொட்டி திமுக BLA 2 பொறுப்பாளர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-03-13 05:52 GMT

ஆலோசனை கூட்டம் 

2024 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியில் மண்ணச்சநல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் பூனாம்பாளையம் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி BLA-2பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பூனாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திமுக கிளை செயலாளர்கள் BLA 2 பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News