நெல்லையில் தேவருக்கு திமுகவினர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-10-30 09:42 GMT

திமுகவினர் மரியாதை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அந்த வகையில் தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த்,தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், சிறுபான்மை அணி முகமது அலி, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன், ஒன்றிய செயலாளர் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News