திமுக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்
விருதுநகரில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது - திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எம்.பி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், எம்எல்ஏ தங்கபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கூட்டத்தில் தற்போது தென்காசி தொகுதி எம் பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள ராணி ஸ்ரீகுமார் பேச்சு. 40 தொகுதிகளிலும் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். இது எங்கள் தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. எனக்கு வாய்ப்பை அளித்த முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கனிமொழி எம்பி, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்றும் மக்களுக்கு உண்மையாக இருப்பேன். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அமைச்சர், எம்எல்ஏ உதவியோடு செய்து கொடுப்பேன். கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு. இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாமல் மாநிலம் முழுவதும் வெற்றியை சுவைத்த ஒரே கட்சி திமுக. மற்ற மாநிலங்களில் இரண்டாக மூன்றாகப் பிரிந்து கட்சிகள் இருந்தன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கிற கட்சி 40க்கு 40க்கு என்ற மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது வாக்காளர்களின் கருணை. வாக்காளர்களின் கொடை. தளபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை. தளபதியாரின் பரப்புரை, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பரப்புரை. இந்த பரப்புரைகள் எல்லாம் தமிழக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளீர்கள். இந்த வெற்றிக்கு நாங்கள் நன்றி கடனாக இப்பகுதி மக்களுக்கு அனைத்து நன்மைகளும் செய்து தருவோம்.
தற்போது நாங்கள் ரூபாய் 1000 வழங்கி கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்போம். இன்னும் பல நலத்திட்டங்களை எல்லாம் நம்முடைய முதல்வர் செய்ய இருக்கிறார்கள். அவர் உங்கள் முதல்வர். உங்கள் சகோதரர். உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் என்றென்றும் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் 20,000 வித்தியாசம் 40 ஆயிரமாக மாற வேண்டும். நம்முடைய ஊருக்கு சட்டமன்ற உறுப்பினர் நிறைய திட்டங்களை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதற்கு உதவியாக நான் இருந்திருக்கிறேன்.
நாங்கள் கேட்கும் அனைத்தையும் முதல்வர் செய்து கொடுத்து கொண்டே இருக்கிறார். நானும் அமைச்சர் தங்கம் தென்னரசு இணைந்து விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம் என்று சொல்லிக் கொண்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்