திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மக்களவை தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனை ஆதரித்து திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-07 04:01 GMT
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.எஸ்,மாதேஸ்வரனை ஆதரித்து திருச்செங்கோடு நகரம், 18-வது வார்டு சூரியம்பாளையம் பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வாக்குகள் சேகரித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர செயலாளர்.கார்த்திகேயன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, வழக்கறிஞர் பிரிவு தலைவர் தசுரேஷ் பாபு,நகரமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வாக்குகள் சேகரித்தனர்.